ஹுனானில் H5N1

ஹுனான் மாகாணத்தின் தெற்கு நகரான ஷாவ்யாங்கில் (Shaoyang) உள்ள ஒரு பண்ணையில் H5N1 பறவைக் காய்ச்சல் அதிகம் இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது.

ராய்ட்டர்ஸ் செய்தியின்படி, 7,850 கோழிகளுடன் உள்ள ஒரு பண்ணையில் இது நிகழ்ந்தது என்றும், அவற்றில் 4,500 கோழிகள் காய்ச்சலால் இறந்துவிட்டன என்றும் கூறப்படுகிறது.

ஷாவ்யாங், வுஹான், ஹூபேயில் இருந்து சுமார் 547 கி.மீ தூரத்தில் உள்ளது, அல்லது அங்கிருந்து ஆறு மணிநேர தூரத்தில் அமைந்துள்ளது. வுஹான், கொரோனா வைரஸ் பாதிப்பின் மையமாகும். இங்கு 259 மனித இறப்புகள் பதிவுசெய்யப்பட்டு, மேலும் சுமார் 12,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

யுனைடெட் ஸ்டேட்ஸ் புவியியல் ஆய்வு/United States Geological Survey, கோழிகளைக் கொல்லும் திறனை அடிப்படையாகக் கொண்டுள்ள பறவைக் காய்ச்சலை, “அதிக நோய்க்கிருமி” கொண்டதாக வரையறுக்கிறது.

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, மனிதர்களுக்கு H5N1, இறந்த பறவைகள் அல்லது அசுத்தமான சூழலுடன் தொடர்பு கொள்வதன் மூலம் பரவுதல் பொதுவாக இருந்தாலும் கூட, குறைந்த சாத்தியமாக§ உள்ளது என்கிறது.

“வைரஸ் மனிதர்களை எளிதில் பாதிக்காது, மேலும் ஒருவரிடமிருந்து ஒருவருக்கு பரவுவது அசாதாரணமானது என்று தோன்றுகிறது”.

“ஒழுங்காக தயாரிக்கப்பட்ட மற்றும் நன்கு சமைத்த உணவு மூலம் இந்த நோய் மக்களுக்கு பரவுகிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை” என்று WHO தெரிவித்துள்ளது.