“COVID-19” = கொரோனா நோய் கிருமியின் அதிகாரப்பூர்வ பெயர்

COVID-19 என்பதைக் குறிக்கும், ‘கொரோனா வைரஸ் நோய்’ 2019 என்பது தான் கொரோனா வைரஸின் அதிகாரப்பூர்வ பெயர் என்று உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது.

WHO-இன் டைரக்டர் ஜெனரல் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டார், அவர் “CO” என்பது “கொரோனா”, “VI”, “வைரஸ்” மற்றும் “D” “நோய்” [“co” for “corona”, “vi” for “virus” and “d” for “disease”], என்று விளக்கினார்.

“WHO, விலங்கு ஆரோக்கியத்திற்கான உலக அமைப்பு/World Organisation for Animal Health (OIE), மற்றும் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு/Food and Agriculture Organization (FAO) ஆகியவற்றுக்கு இடையே ஒப்புக்கொள்ளப்பட்ட வழிகாட்டுதலின் கீழ், புவியியல் இருப்பிடம், ஒரு விலங்கு, மக்கள், ஒரு தனிநபர் அல்லது குழுவைக் குறிக்காத ஒரு பெயரை நாங்கள் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. இது உச்சரிக்கக்கூடியது மற்றும் நோயுடன் தொடர்புடைய பெயராக இருக்கிறது”, என்று விளக்கினார்.

“நோய், ஒரு பெயரைக் கொண்டிருப்பது மிக முக்கியமானதாகும். இது தவறானது பிற பெயர்களைப் பயன்படுத்துவதைத் தடுத்து, எதிர்காலத்தில் எந்தவொரு கொரோனா வைரஸ் பாதிப்புக்கும் பயன்படுத்தக்கூடிய ஒரு நிலையான பெயரை வழங்குகிறது,” என்று அவர் கூறினார்.

இன்றைய நிலவரப்படி, கடந்த ஆண்டு டிசம்பரில் சீனாவின் வுஹானில் முதன்முதலில் கண்டறியப்பட்ட இந்த புதிய வைரஸ் 42,708 உறுதிப்படுத்தப்பட்ட COVID-19 பாதிப்புக்களை பதிவுசெய்துள்ளது. இறப்பு எண்ணிக்கை சீன குடியரசில் 1,017-ஐ எட்டியுள்ளது.

மலேசியாவில் 18 பாதிப்புகள் உட்பட 24 நாடுகளில் 393 பாதுப்புகள் பதிவாகியுள்ளன, பிலிப்பைன்ஸில் ஒரு மரணமும் பதிவாகியுள்ளது.

  • பெர்னாமா