மரண தண்டனையை எதிர்த்து மலேசியர் சிங்கப்பூரில் மேல்முறையீடு

மரண தண்டனையை எதிர்கொள்ளும் மலேசியரான பன்னீர் செல்வம் பரந்தாமன் சிங்கப்பூர் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வார். அங்குள்ள உயர்நீதிமன்றம் அவரின் பொது மன்னிப்பு விண்ணப்பத்தை நிராகரித்தது தொடர்ந்து அவர் இம்மேல்முறையீட்டை செய்கிறார்.

“பன்னீர் இந்த முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்வார். எனவே, வழக்கு இன்னும் முடிவடையவில்லை. மேல்முறையீட்டு விண்ணப்பத்தை சமர்ப்பிக்க இன்னும் ஒரு மாதம் உள்ளது,” என்று வக்கீல் தூ ஜிங் ஜி இன்று கூறினார்.

32 வயதான பன்னீர், செப்டம்பர் 3, 2014 அன்று, சிங்கப்பூர் ஊட்லன்சில் 51.84 கிராம் டயமார்பைன் (diamorphine) போதைபொருள் கடத்தலுக்காக சிங்கப்பூர் உயர் நீதிமன்றத்தால் 2017 ஜூன் 27 அன்று குற்றவாளி பன்னீருக்கு தண்டனை வழங்கியதது குறிப்பிடத்தக்கது.

  • பெர்னாமா