காரணம் இல்லாமல் திடீரென்று நான் ராஜினாமா செய்தது உண்மையா? – மகாதீர்

காரணம் இல்லாமல் திடீரென்று நான் ராஜினாமா செய்தது உண்மையா? – டாக்டர் மகாதீர் முகமட், முன்னாள் பிரதமர்

மகாதீர் முகமது | நான், மகாதீர் முகமது, பிரதமர் பதவியை ராஜினாமா செய்தபோது தான் அரசியல் நெருக்கடி தொடங்கியது என்று பிரதமர் முகிதீன் கூறியுள்ளார்.

காரணம் இல்லாமல் திடீரென்று நான் ராஜினாமா செய்தேனா?

எதிர்க்கட்சிகளாலும், நஜிப் ரசாக் உட்பட ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள பலராலும் நான் ஆதரிக்கப்படுகிறேன் என்று சொல்லப்படுகிறது?

இதில் அர்த்தமே இல்லை.

உண்மை என்னவென்றால், எனது ஆதரவாளர்கள் என்னை ஆதரிக்க வில்லை என்று மாட்சிமை தங்கிய மன்னரிடம் ஒப்புக் கொண்டதால் நான் ராஜினாமா செய்தேன்.

எனக்கு பெரும்பான்மை இல்லை, அதனால் தொடர்ந்து பிரதமராக தகுதி பெறவில்லை.

அரண்மனை என் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டது. நான் இடைக்கால பிரதமர் பதவிக்கு நியமிக்கப்பட்டேன்.

எனக்கு பதிலாக யார் வருவார். நல்லாட்சியை விடுத்து அரசியல் மட்டுமே செய்யும் அரசியல்வாதிகளால் மக்கள் சோர்ந்து போய்விட்டார்கள்.

அரசியல் ரீதியாக இல்லாமல் ஒரு தேசிய அரசாங்கத்தை அமைக்க நான் பரிந்துரைத்தேன்.
தங்கள் கட்சி கொள்கைக்கு உட்பட்டவர்களாக இல்லாமல் சாதாரண மக்களாக, கட்சியினர் அரசாங்கத்தில் சேருவார்கள்.

ஆனால் எனது திட்டம் நிராகரிக்கப்பட்டது. நானும் ராஜினாமா செய்தேன். பின் நெருக்கடி தொடர்ந்தது. அது எப்போது முடியும் என்று எனக்குத் தெரியவில்லை?

டாக்டர் மகாதீர் முகமட், முன்னாள் பிரதமர்.
இந்த இடுகை முதன்முதலில் அவரது வலைப்பதிவில் “அரசியல் விமர்சனம்” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது. இது மலேசியாகினியின் நிலையை, கருத்தை பிரதிபலிக்க வேண்டிய அவசியமில்லை.