முகிதீன் தன் அரசியல் செயலாளரை நியமித்தார்

முகிதீன் தன் அரசியல் செயலாளரை நியமித்தார்

பிரதமர் முகிதீன் யாசின், மார்சுகி முகமதுவை தன் பொதுச்செயலாளராக நியமித்துள்ளார்.

முகிதீன் எட்டாவது பிரதமராக பதவியேற்ற நாளான மார்ச் 1 ஆம் தேதி இந்த நியமனம் நடைமுறைக்கு வந்தது.

ஒரு அறிக்கையில், 46 வயதான மர்சுகி, முகிதீனின் கீழ் பல்வேறு பதவிகளில் பணியாற்றியுள்ளார். 2009 முதல் 2013 முகிதீன் பிஎன் அரசாங்கத்தின் துணைப் பிரதமராக இருந்த போது, மார்சுகி சிறப்பு அதிகாரியாக பணியாற்றியுள்ளார்.

சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் சட்ட பட்டதாரியான மார்சுகி, 2003 முதல் 2015 வரை கல்வி அமைச்சில் முகிதீனின் அரசியல் செயலாளராகவும் பணியாற்றினார். பின்னர் 2018-ல் பாக்காத்தான் அரசாங்கத்தின் கீழ் மாநில அமைச்சராக முகிதீன் நியமிக்கப்பட்டபோது மார்சுகி சிறப்பு பணிக்குழு அதிபராக நியமிக்கப்பட்டார்.

மர்சுகி மலேசியாவின் தேசிய பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் இளங்கலை பட்டமும், ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் (பி.எச்.டி) பெற்றுள்ளார். அவர் UIAM இல் விரிவுரையாளர் மற்றும் சட்டப் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.