ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு: சவுதி அரச குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கைது!

ரியாத்: ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின்கீழ் சவூதி அரேபியா மன்னரின் இளைய சகோதரர் உள்ளிட்ட அந்நாட்டு அரச குடும்ப மூத்த உறுப்பினர்கள் 3 பேரை பிடித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சவுதி அரேபிய மன்னர் சல்மானின் இளைய சகோதரரான இளவரசர் அகமது பின் அப்துல் அஸிஸ், முன்னாள் பட்டத்து இளவரசர் முகமது பின் நயீப் மற்றும் அரச குடும்பத்தை சேர்ந்த உறவினர் இளவரசர் நவாஃப் பின் நயீப் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விசாரணைக்கான காரணம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை. இருப்பினும் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின்கீழ் இருவரிடம் வெள்ளிக்கிழமை முதல் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.

அதேவேளையில், இந்த கைது நடவடிக்கைக்கும் சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுக்கும் தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதே போன்று, கடந்த 2017ம் ஆண்டு முகமது பின் சல்மானின் உத்தரவின் பேரில் சவுதி அரச குடும்பத்தை சேர்ந்தவர்கள், அமைச்சர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் ரியாத்தில் உள்ள சொகுசு விடுதி ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டனர்.

2017ம் ஆண்டு முகமது பின் சல்மானால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட முகமது பின் நயீப் சவுதி அரேபியாவின் உள்துறை அமைச்சராக இருந்துள்ளார். சவுதி அரேபியாவின் இளவரசராக கடந்த 2016ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது முதல் அந்நாட்டின் அறிவிக்கப்படாத ஆட்சியாளர் போன்று முகமது பின் சல்மான் விளங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

dinakaran