செலாயாங் மொத்த சந்தையில் கூடல் இடைவெளி நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதற்கும் நடைமுறைப்படுத்துவதற்கும் காவல்துறை மற்றும் இராணுவத்தை அனுப்ப அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப், நேற்று எச்சரிக்கைகள் அளிக்கப்பட்ட போதிலும், மக்கள் கூடல் இடைவெளிக்கு இன்னும் இணங்க மறுக்கிறார்கள் என்றார்.
“இன்னும் நிறைய பேர் நெரிசலாக உள்ளனர். ஒரு மீட்டர் கூடல் இடைவெளி தூரம் தொடர்பான நடத்தைகளுக்கு அவர்கள் கடைபிடிப்பதில்லை”.
“ஆகவே, செலாயாங் மொத்த சந்தையில் மக்கள் கூடல் இடைவெளியை பின்பற்றுவதை உறுதி செய்வதற்காக காவல்துறையையும் இராணுவத்தையும் அங்கே அமர்த்துவோம்” என்று அவர் இன்று புத்ராஜெயாவில் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.