கோவிட்-19: கெடா, பெர்லிஸ் மற்றும் பினாங்கு ஆகியவை பச்சை மண்டல மாநிலங்களாக மாறக்கூடும்

புதிய பாதிப்புகள் எதுவும் பதிவு செய்யப்படாவிட்டால், தீபகற்பத்தின் மூன்று வடக்கு மாநிலங்கள் கோவிட்-19 இன் பச்சை மண்டலமாக மாறக்கூடும் என்று சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

இதற்கு, கெடா, பெர்லிஸ் மற்றும் பினாங்கு ஆகியவை 14 நாட்களுக்கு எந்தவொரு நேர்மறையான பாதிப்பிலிருந்தும் விடுபட வேண்டும் என்று அவர் கூறினார்.

“கெடா, பெர்லிஸ் மற்றும் பினாங்கு மாநிலங்கள் சமீபத்திய நாட்களில் எந்தவொரு புதிய பாதிப்புகளையும் கொண்டிருக்கவில்லை என்றாலும், அப்பகுதிகளில் பாதிப்பு இல்லை என்று சொல்லுவதற்கு 14 நாட்கள் காத்திருக்க வேண்டும்”.

“எனவே இப்போது நாங்கள் அம்மாநிலங்களை கவனிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். 14 நாட்களுக்குள் மூன்று மாநிலங்களில் பாதிப்புகள் எதுவும் இல்லை என்றால், நாம் அம்மாநிலங்களை பச்சை மாநிலமாகக் கருதலாம்” என்று அவர் இன்று புத்ராஜெயாவில் தினசரி ஊடக மாநாட்டில் கூறினார்.

ஒரு மாநிலத்திற்குள் சில மாவட்டங்களைத் தவிர இதுவரை நாட்டில் எந்த மாநிலமும் பச்சை மண்டலமாக அறிவிக்கப்படவில்லை.