24 மணி நேரத்தில் கொவிட்19 தொற்றாளர் இல்லை

கடந்த 24 மணி நேரத்தில் இலங்கையில் கொவிட்19 வைரஸால் பாதிக்கப்பட்ட தொற்றாளர் இனங்காணப்படவில்லை என தொற்று நோயியில் பிரிவு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் பூரண குணமடைந்த ஐந்து பேர் நேற்று (16) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

இதனையடுத்து, பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 163ஆக காணப்படுகின்றது.

இதுவரை இலங்கையில் 238 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

தற்போது 163 பேர் மருத்துவ கண்காணிப்பில் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதேவேளை, ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.

Tamilmirror