சிவப்பு மண்டலமாக வகைப்படுத்தப்பட்ட பகுதிகள் குறைந்து வருகின்றன

பாதிப்பு தொடங்கியதிலிருந்து 40க்கும் மேற்பட்ட கோவிட்-19 பாதிப்புகளை பதிவு செய்ததற்காக சுமார் 28 மாவட்டங்கள் சிவப்பு மண்டல பகுதிகளாக அறிவிக்கப்பட்டன. இப்போது இதில் குறைந்தது 11 பகுதிகளில் பல நோயாளிகள் குணமடைந்துள்ளனர்.

சுகாதார அமைச்சினால் தினசரி வெளியிடப்பட்ட தரவுகளின் படி, நான்கு சிவப்பு மண்டலங்களில், 10 அல்லது அதற்கும் குறைவான செயலில் உள்ள பாதிப்புகள் மட்டுமே உள்ளன என தெரிவித்துள்ளது. செயலில் உள்ள பாதிப்புகள், இன்னும் சிகிச்சையில் உள்ள நோயாளிகளைக் குறிக்கின்றன.

இந்த 11 சிவப்பு மண்டல மாவட்டங்களில் பெரும்பான்மையான நோயாளிகள் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என்பதை குறிக்கிறது.