இலங்கை குடியரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சேவின் கட்சியைச் சார்ந்த முதலமைச்சர் மஹிபால ஹேரத்திற்கு ‘மகாத்மா காந்தி’ விருது வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் மகிந்த அரசினால் படுகொலை செய்யப்பட்டு குருதிகூட இன்னும் காயவில்லை; அதற்குள் இனப்படுகொலை செய்தார் என கூறப்படும் மகிந்தவின் நண்பரும் அவரின் கட்சி முதலமைச்சருமான ஒருவருக்கு உலகில் அகிம்சா வாதத்தின் தந்தை என வர்ணிக்கக் கூடிய இந்தியாவின் உதாரண புருஷரான ‘மகாத்மா காந்தி’ நினைவு விருதை வழங்கப்பட்டதானது கொலைகாரர்களுக்கு கௌரவ பட்டம் வழங்குவதற்கு சமனாகும்.
இதனிடையே, ‘மகாத்மா காந்தி’ விருது பெற்ற முதலமைச்சர் மஹிபால ஹேரத்திற்கு இலங்கை தலைமையமைச்சர் டி.எம். ஜயரத்ன, பாராட்டையும் வாழ்த்துகளையும் தெரிவித்ததுடன் மகிந்த ராஜபக்சேவின் சமாதான முயற்சிக்குக் கிடைத்த அனைத்துலக அங்கீகாரம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இலங்கை நாடு இன்று சமாதானத்திற்கும் அமைதிக்கும் ஒரு முன் உதாரண நாடாக மாறி உள்ளது. அதன் அடிப்படையில் எழுந்த ஒரு கௌரவம்தான் ‘மகாத்மா காந்தி’ நினைவு விருதை இலங்கையர் ஒருவர் வென்றமை.
இது தனிப்பட்ட ரீதியில் மஹிபால ஹேரத்திற்கு மட்டும் கிடைத்த கௌரவம் அல்ல. முழு இலங்கைக்கும் மகிந்த ராஜபக்சேவின் சமாதான முயற்சிக்கும் கிடைத்த ஒரு அனைத்துலக அங்கீகாரம் எனலாம் என்றார்.