கொரோனா இலங்கை நிலவரம்

இலங்கையில் கோவிட்-19 தொற்று காரணமாக 889 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுகாதார அமைச்சின் தகவல்களின் பிரகாரம், 514பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன், 366 பேர் சிகிச்சைகளின் பின்னர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள அதேவேளை, 117 பேர் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் தொடர்ந்தும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

7 ஆண்களும், 2 பெண்களும் கொவிட் தொற்று காரணமாக இலங்கையில் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், இலங்கையில் இதுவரை 35,000திற்கும் அதிகமான பி.சி.ஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

BBC