இலங்கையில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் நல்லெண்ண அடிப்படையில் இந்தியாவிற்கு அனுப்ப தீர்மானம்
இலங்கையில் கைதுசெய்யப்பட்டுதடுத்து வைக்கப்பட்டுள்ள 26 இந்திய பிரஜைகளை நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளஅமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
மிரிஹானதடுப்பு முகாமில் மொத்தமாக 28 இந்தியபிரஜைகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள போதிலும், அவர்களில் இருவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமையினால் எஞ்சிய 26 பேரை மாத்திரமே விடுதலை செய்யதீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.இவ்வாறு விடுதலை செய்யப்படுபவர்களில் 11 இந்திய மீனவர்களும் அடங்குவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை கடற்பரப்பிற்குள்அத்துமீறி பிரவேசித்து கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட 11 இந்திய மீனவர்களே இவ்வாறு நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்கப்படவுள்ளனர்.எஞ்சிய 15 பேரும்விசாஇன்றி இலங்கையில்சட்டவிரோதமாகதங்கியிருந்தவர்கள்எனதெரிவிக்கப்படுகின்றது.கொரோனாவைரஸ்தாக்கம் இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்ற நிலையிலேயே, குறித்தஇந்தியபிரஜைகளை நல்லெண்ண அடிப்படையில் விடுதலைசெய்யதீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அதேவேளை,இவர்களைதவிர, வர்த்தக உள்ளிட்ட பல்வேறு காரணங்களின்நிமித்தம்இலங்கைக்குவருகைதந்த நிர்க்கதிக்குள்ளானஇந்தியபிரஜைகளும், இவர்களுடன் சேர்த்து அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அறிய முடிகின்றது.
இலங்கையிலுள்ளஇந்தியபிரஜைகள் எதிர்வரும் 29ஆம் தேதிஏயார்இந்தியாநிறுவனத்திற்குசொந்தமான விசேட விமானமொன்றின் ஊடாக இந்தியாநோக்கிபயணிக்கவுள்ளதாக .இவ்வாறு இந்தியா செல்வோர்அங்கு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னரே தமது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கைக்கான இந்தியஉயர்ஸ்தானிகராலயம்அறிவித்துள்ளது.கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இலங்கையில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள இந்தியபிரஜைகள் முதற்கட்டமாக எதிர்வரும் 29ஆம் தேதியே தாயகம் திரும்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
BBC