எல்லை கடக்கும் முயற்சியில் சிலாங்கூர் முன்னிலை

நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடை மீறியதற்காக 1,158 வாகனங்கள் திரும்பி செல்ல உத்தரவிடப்பட்டன. எண்ணிக்கையில் குறைந்திருந்தாலும், சிலர் நோன்பு பெருநாளை கொண்டாட கிராமத்திற்குத் திரும்ப நாடு முழுவதும் இன்னும் முயற்சிப்பதை இது குறிக்கிறது.

நேற்று இரவு நாடு முழுவதுமான சாலைத் தடைகளில், சிலாங்கூர் (460 வழக்குகள்), மலாக்கா (121 வழக்குகள்) மற்றும் நெகேரி செம்பிலான் (95 வழக்குகள்) ஆகிய மூன்று மாநிலங்கள் அதிக எண்ணிக்கையிலான எல்லை கடக்கும் முயற்சிகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளன என்று பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.

“மலேசிய காவல்துறை (பி.டி.ஆர்.எம்) நாடு முழுவதும் 162 சாலைத் தடைகளை அமைத்து 157,364 வாகனங்களை ஆய்வு செய்தது.”

“கிராமத்திற்குத் திரும்புவதன் அடிப்படையில் மொத்தம் 1,158 வாகனங்கள் மாநில எல்லையைக் கடக்க முயன்றன, ஆனால் அவை திரும்பி செல்ல உத்தரவிடப்பட்டன. அதற்கு முந்தைய நாள் 1,613 வாகனங்கள்.” என்று கோலாலம்பூரில் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.