இலங்கையில் முன்னெப்போதும் இல்லாத வகையில், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 150 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
வெளிநாடுகளிலிருந்து அழைத்து வரப்பட்டு, தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட இலங்கையர்களே கடந்த 24 மணிநேரத்தில் அதிகளவில் கொரோனா தொற்றுக்குள்ளாகி அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களில் நேற்று மட்டும் 97 பேருக்கும், இதுவரை 303 பேருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதன் மூலம், இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1,469ஆக அதிகரித்துள்ளது.
கடற்படை வீரர்கள்
இலங்கை கடற்படைச் சேர்ந்தவர்களே இலங்கையில் அதிகளவில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தகவல்களின் படி, 771 கடற்படையினர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றால் மற்றுமொருவர் உயிரழந்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11ஆக அதிகரித்துள்ளது.
குவைட்டில் இருந்து நாடு திரும்பிய 45 வயதுடைய ஒருவரே ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று உயிரிழந்ததாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
BBC