இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சி இன்று தொடக்கம்

கோவிட்-19 நோய்த் தொற்றினால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் பயிற்சி நடவடிக்கைகள் 81 நாட்களின் பின்னர் இன்று (ஜூன் 1) மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஶ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

முதற்கட்டமாக 12 நாட்கள் தங்கியிருந்து பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பயிற்சிகளில் அணித் தலைவர் திமுத் கருணாரத்ன உள்ளிட்ட 13 பேர் கலந்து கொள்ளவுள்ளனர்.

பந்து வீச்சு மற்றும் பேட்டிங் ஆகிய பயிற்சிகள் முதற்கட்டமாக வழங்கப்படவுள்ளதாக ஶ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவுக்குழு தலைவர் அசந்த டி மெல் தெரிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த பயிற்சிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஶ்ரீலங்கா கிரிக்கெட் குறிப்பிடுகின்றது.

BBC