கோவிட்-19: 277 புதிய பாதிப்புகள், இறப்புகள் ஏதும் இல்லை

நீண்ட நாட்களாக இரண்டு இலக்கங்களில் இருந்த கோவிட்-19 நோய்த்தொற்றின் புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை, இன்று மீண்டும் மூன்று இலக்கத்திற்கு உயர்ந்துள்ளது.

புத்ராஜெயாவில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, 277 புதிய கோவிட்-19 பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று கூறினார். இதனால் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 8,247 ஆக உள்ளது.

“மலேசியர்களிடையே உள்ளூர் பாதிப்புகள் நான்கு மட்டுமே. குடிமக்கள் அல்லாதவர்களிடையே நோய்த்தொற்றுகள் 271 பாதிப்புகள் ஆகும். அதே நேரத்தில் வெளிநாடுகளில் பாதிக்கப்பட்ட மலேசிய குடிமக்கள் இறக்குமதி செய்யப்பட்ட இரண்டு (2) பாதிப்புகளும் அடங்கும்” என்று அவர் கூறினார்.

குடிமக்கள் அல்லாதவர்களில் 270 பாதிப்புகள் புக்கிட் ஜாலீல் குடிநுழைவு தடுப்பு முகாமில் கண்டறியப்பட்டன.

அவர்கள் இதற்கு முன்னர் நேர்மறையான பாதிப்புடன் நெறுங்கிய தொடர்பில் இருந்துள்ளனர் என்று அவர் கூறினார். இதற்கிடையில், ஒரு மலேசியர் அல்லாத பாதிப்பு, புடுவில் உள்ள கட்டுமான தளங்களில் கண்டறியப்பட்டதாகும்.

மதியம் நிலவரப்படி, டாக்டர் நூர் ஹிஷாம் மேலும் 28 நோயாளிகள் முழுமையாக குணமடைந்துள்ளனர் என்றுள்ளார். இது பாதிப்பில் இருந்து மீட்கப்பட்ட மொத்த எண்ணிக்கையை 6,559 பேருக்கு அல்லது 79.5 சதவீதமாக கொண்டு வந்துள்ளது.

கோவிட்-19 நோய்த்தொற்றுடன் செயலில் இருக்கும் பாதிப்புகள் 1,573 ஆகும். தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) ஆறு நேர்மறை பாதிப்புகள் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் அவர் கூறினார். இவற்றில், இரண்டு பாதிப்புகளுக்கு சுவாச உதவி தேவைப்படுகிறது.