ஐ.நா உரையை எழுத்திக் கொடுத்து மகிந்த படித்ததாக தகவல்

இலங்கை  குடியரசுத் தலைவர் ஐ.நா மன்றத்தில் ஆற்றிய உரையை பிரிட்டனில் இருக்கும் ஒரு தொழில் ரீதியான பிரச்சார ( லாபியிங்) நிறுவனம் எழுதிக் கொடுத்தது என்று பிரபல பிரிட்டிஷ் செய்தித்தாள் தகவல் வெளியிட்டுள்ளது. இத்தகவலை இலங்கை அரசு கடுமையாக மறுத்துள்ளது.

ஒரு நாட்டின் அல்லது நிறுவனத்தின் அல்லது தனி நபரின் நலன்களை குறிப்பிட்ட இடத்தில் முன்னேடுத்துச் செல்லும் நடவடிக்கைக்கே லாபியிங் என்று பெயர்.

பிரிட்டனில் உள்ள பெல் பாட்டிஞ்ஜர் என்ற நிறுவனத்தின் பேச்சாளர் ஐநாவின் பொது மன்றத்தில் 2010-ம் ஆண்டு மகிந்த ராஜப்கசே ஆற்றிய உரை தம்மால் எழுதிக்கொடுக்கப்பட்டதாக ‘கூறியதாக தி இண்டிபென்டன்ட்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

மகிந்த ராஜபக்சேவின் உரை நல்ல வரவேற்பை பெற்றதாகவும் அந்தப் பேச்சாளர் தெரிவித்தார். பெல் பாட்டிஞ்ஜரின் தலைவர் டேவிட் வில்சன் இலங்கை ஜனாதிபதி தனது வெளியுறவுத்துறை தயாரித்த உரையை படிக்காமல் தமது உரையைப் படித்ததாகக் கூறியமை ரகசியக் ஒளிப்பதிவு மூலமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த உரையாடல்கள் ‘தி இண்டிபென்டன்ட்’ என்ற காலைப் பத்திரிக்கையில் வெளியாகியுள்ளன.

ஆனால் இது உண்மையல்ல என்கிறார் இலங்கை குடியரசுத் தலைவர்  பணிமனையின் பேச்சாளரான பந்துல ஜெயசேகர.

TAGS: