“கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்து வருகின்றது” – இலங்கை அரசு தகவல்

இலங்கையில் மூன்றாவது கட்ட கொரோனா பரவல் தொடங்கி உள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

கொலும்பு, இலங்கையில் மூன்றாவது கட்ட கொரோனா பரவல் தொடங்கி உள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. கம்பகா மாவட்டத்தில் உள்ள மினுவங்கொட பகுதியில் உள்ள தனியார் ஆடை தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்த பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த 3ஆம் தேதி உறுதிப்படுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, போலீஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. கொரோனா காரணமாக  இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 4,252 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் 3,266 பேர் குணம் அடைந்துள்ள நிலையில், 973 பேர் தொடர்ந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

dailythanthi