மாவட்ட ரீதியில் கொரோனா விவரம்..

ஒக்டோபர் 27 ஆம் திகதியன்று இனங்காணப்பட்ட, கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை, மாவட்ட ரீதியில் இன்று (28)வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணித்தவர்களின் எண்ணிக்கை 19ஆக அதிகரித்துள்ளது,

தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்ற 19 மற்றும் 75 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

வாழைத்தோட்டம் மற்றும் கொழும்பு 2 பகுதிகளைச் சேர்ந்த இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

முன்னதாக, ஐடிஎச் இல் சிகிச்சைப்பெற்றுவந்த 42 வயதான நபர் ஒருவர் உயிரிழந்திருந்தார்.

இதனை, சுகாதார அமைச்சு அறிவித்துள்ளதுடள், அவர் ஜா-எல பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கடந்த ஒருவாரத்துக்குள், கொ​ரோனா வைரஸால் தொற்றால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 6ஆக அதிகரித்துள்ளது.

TamilMirror