பாஸ் அம்னோவுடன் ஜிஇ15-க்குச் செல்லாது – அன்னுவார்

அடுத்த பொதுத் தேர்தலுக்கு (ஜிஇ), பாஸ் கட்சியுடன் மட்டும் களமிறங்க வேண்டும் எனும் அம்னோவின் திட்டம் இனி இல்லை என்று தேசிய முன்னணி பொதுச் செயலாளர் அன்னுவார் மூசா கூறினார்.

பெர்சத்து-வுடனும் அம்னோ கூட்டு சேர வேண்டும் என்று பாஸ் வலியுறுத்துவதே இதற்குக் காரணம் என்று அவர் சொன்னார்.

“எங்கள் ஆய்வின்படி, அம்னோவும் பாஸ்-சும் போதியப் பலத்தைக் கொண்டுள்ளன, அவை வெற்றி பெற வாய்ப்புண்டு (அடுத்த தேர்தலில்).

“ஆனால் பாஸ், பெர்சத்துவை விட்டுவிட்டு அம்னோவுடன் மட்டும் களத்தில் இறங்க தயக்கம் காட்டுகிறது.

“அம்னோ, பாஸ், பெர்சத்து மூன்றும் கூட்டணி அமைக்க வேண்டுமென பாஸ் விரும்புகிறது,” என்று அவர் நேற்று இரவு அளித்த பேட்டியில் கூறினார்.

புதன்கிழமை நடந்த முவாஃபாகாட் தேசிய கூட்டத்தின் போது, பாஎஸ் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளது என்று அன்வார் கூறினார்.

அம்னோவும் பாஸ்-சும் இணைந்து பணியாற்றி, பக்காத்தான் ஹராப்பானுக்கு எதிராக, குறைந்தது 6 இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளது.

அடுத்தப் பொதுத் தேர்தலில் இருவரும் ஒன்றாகப் போட்டியிட்டால், அவர்களால் முஹைதீனின் பெர்சத்துவைத் தோற்கடித்து, புத்ராஜெயாவைக் கைப்பற்ற முடியுமென அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், பாஸ் இப்போது பெர்சத்துவின் தேசியக் கூட்டணியில் உறுப்பினராக உள்ளது.

பெர்சத்துவை, தேசிய முவாஃபாகாட்’டில் சேர்க்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இருப்பினும், அம்னோ பெர்சத்துவுடன் முரண்படுகிறது, தளர்வான அந்த ஆளும் கூட்டணியில், மிகப்பெரியக் கட்சியான அம்னோவுக்குத், தகுதியான மரியாதைகள் கிடைக்கவில்லையென அது கருதுகிறது என்று கூறுகிறார்.

இது ஒரு தவறான கதை என்று அன்னுவார் கூறினார்.

“இது உருவாக்கப்பட்ட ஒரு கதை […] அமைச்சரவையில் பாதி தேசியக் கூட்டணி சார்ந்தது […] அரசாங்கத்தில் நாங்கள் விரும்புவதை செய்ய எங்களால் முடியும், நாங்கள் பொறுப்பேற்க முடியும்.

“ஆக, இந்தக் கதையை ஏன் உருவாக்க வேண்டும்?” என்றார் அவர்.

மார்ச் மாதத்தில் அவர்கள் அரசாங்கம் அமைத்த போதே, அம்னோ அமைச்சரவை கட்டமைப்பை ஏற்றுக்கொண்டதாக அவர் கூறினார், ஆக, எட்டு மாதங்கள் கழித்து ஏன் புகார்கள் எழுந்துள்ளன என்று அவர் கேள்வி எழுப்பினார்.

பி.கே.ஆர். தலைவர் அன்வர் இப்ராஹிம் மற்றும் டிஏபி ஆகியோருடன் பணியாற்றுவதை நிராகரிக்கும் முயற்சியில், முஹைதீன் மற்றும் பெர்சத்துவுடன் இணைந்து பணியாற்றுவதற்கான முடிவு அம்னோவின் கூட்டு முடிவு என்று அன்வார் கூறினார்.