‘சடலங்கள் எரிப்பதை நிறுத்த வேண்டாம்’

கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகி மரணிப்போரின் சடலங்களை, எரியூட்டுவதை நிறுத்தவேண்டாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

சடலங்களை அகற்றுவது தொடர்பில் ஆராய்வத்றகாக நியமிக்கப்பட்ட விசேட குழுவின் இறுதி அறிக்கை கிடைக்கும் வரையிலும் சடலங்களை எரியூட்டுவதை தொடர்ந்து முன்னெடுக்குமாறு அந்தக் குழு, சுகாதார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது கோரிக்கை தொடர்பில் சுகாதார அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொவிட் -19 வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணிப்போரின் சடலங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட குழுவின் இறுதி அறிக்கை கிடைத்ததன் பின்னர், சடலங்கள் தொடர்பில் இறுதித் தீர்மானம் எட்டப்படும் என சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியரச்சி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

TamilMirror