குணமடைந்த 489 பேர் வீடு திரும்பினர்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து இன்று (13) மேலும் 489 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என, சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 23,793 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் இதுவரை 32, 135 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 149 மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Tamilmirror