இன்று 224 ஆவது எம்.பி சத்தியப்பிரமாண

புத்தாண்டுக்கான முதலாவது பாராளுமன்ற அமர்வு, இன்று காலை 10 மணிக்கு ஆரம்பமாகும். இதன்போது, 224 ஆவது எம்.பி, இன்றையதினம் சத்தியப்பிரமாணம் செய்துகொள்வார்.

ஓகஸ்ட் 5ஆம் திகதியன்று நடத்தப்பட்ட பாராளுமன்றத் தேர்தலில், வெற்றியீட்டிய மற்றும் நியமன எம்.பிக்கள் அடங்கலாக 223 பேர், இதுவரையிலும் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

எனினும், தங்களுடைய கட்சிகளுக்குக் கிடைத்த தேசிய பட்டியல் நியமனம் பூர்த்தி செய்யப்படாமையால், ஐக்கிய தேசிய கட்சியையும் எங்கள் மக்கள் சக்தி கட்சியையும் சேர்ந்த தேசிய பட்டியல் உறுப்பினர்கள் எவரும், சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவில்லை.

இந்நிலையில், எங்கள் மக்கள் சக்தி கட்சியின் சார்பில், நீண்ட இழுபறிக்குப் பின்னர் அத்துரலிய ரத்தன தேரர் நியமிக்கப்பட்டார். அவர், இன்றையதினம் 224 ஆவது எம்.பியாக சத்தியப்பிரமாணம் செய்துகொள்வார். அவருக்கு, எதிர்க்கட்சியின் பக்கத்தில் முன்வரிசையில் ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது என பாராளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சிக்குக் கிடைத்திருக்கும் தேசிய பட்டியல் நியமனம், இன்னுமே பூர்த்தி செய்யப்படாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய முதல்நாள் அமர்வு, பிற்பகல் 4.30 வரை இடம்பெறும்.  இவ்வாரத்துக்கான அமர்வு, 8ஆம் திகதி வரையிலும் இடம்பெறும்

Tamilmirror