பாராளுமன்றம் 2 நாள்கள் கூடும்; 2 நாள்கள் கூடாது

நாளையும் (19) நாளை மறுதினமும் (20) மாத்திரமே பாராளுமன்றம் கூடுமென ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் 21 மற்றும் 22ஆம் திகதிகளில் பாராளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறாதென்றும் இன்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில்;தீர்மானம் எடுக்கப்பட்டதாக மனோ கணேசன் தனது  பேஸ்புக் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில், இன்று நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்திலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது

Tamilmirror