மார்ச் 5 முதல் சிலாங்கூர், கே.எல்., ஜொகூர் மற்றும் பினாங்கில் பி.கே.பி.பி.

மார்ச் 5 முதல், நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி.பி.) சிலாங்கூர், கோலாலம்பூர், ஜொகூர் மற்றும் பினாங்கு ஆகிய மாநிலங்களில் அமலுக்கு வரும் என்று மூத்த அமைச்சர் (பாதுகாப்பு) இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்துள்ளார்.

சபாவைத் தவிர – மாநில அரசின் வேண்டுகோளின்படி – அனைத்து மாநிலங்களிலும் எல்லையைக் கடக்கும் பயணம் அனுமதிக்கப்படுகிறது.

இருப்பினும், மாநில எல்லையைக் கடக்கும் பயணம் நாடு முழுவதும் தடைசெய்யப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், கெடா, கிளாந்தான், நெகிரி செம்பிலான், சரவாக் மற்றும் பேராக் ஆகிய இடங்களில் நிபந்தனைக்குட்பட்ட பி.கே.பி. அமலாக்கம் தொடர்ந்து இருக்கும்.

மலாக்கா, பஹாங், திரெங்கானு, சபா, புத்ராஜெயா மற்றும் லாபுவானுக்கு, மீட்புநிலை பி.கே.பி. மார்ச் 5 முதல் அமல்படுத்தப்படும்.

“இந்த மாநிலங்களுக்கான நிபந்தனைக்குட்பட்ட மற்றும் மீட்புநிலை பி.கே.பி., மார்ச் 5 முதல் மார்ச் 18 வரை நடைமுறையில் இருக்கும். சரவாக்கில் மார்ச் 2-ல் தொடங்கி, மார்ச் 15 வரையில் இருக்கும்,” என்று அவர் கூறினார்.

மீட்புநிலை பி.கே.பி. அமலாக்கம் பெர்லிஸில் தொடர்ந்து அமலில் இருக்கும்.