நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி.பி) மற்றும் மீட்புநிலை நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி.பி) ஆகியப் பகுதிகளில் படப்பிடிப்பு நடவடிக்கைகள் அனுமதிக்கப்படுகின்றன, ஆனால் தேசியப் பாதுகாப்பு மன்றம் (எம்.கே.என்.) கோடிட்டுக் காட்டிய செந்தர இயங்குதல் நடைமுறைகளை (எஸ்ஓபி) அவை முறையாகக் கடைபிடிக்க வேண்டும்.
தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தின் (ஃபினாஸ்) பெருநிறுவனத் தொடர்புப் பிரிவு, அது நோய் மற்றும் கட்டுப்பாடு தடுப்பு நெறிமுறைகள், சுகாதாரப் பரிசோதனைகள், வளாகங்களைச் சுத்தம் செய்தல் மற்றும் கிருமி நீக்கம் செய்தல், தனிமைப்படுத்துதல், பணியாளர் பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் அவசரச் சூழல் பிரதிபலிப்பு ஆகியவற்றை உள்ளடக்கியது என்றார்.
பி.கே.பி.பி. அமலாக்கம் தொடர்பாக மூத்த அமைச்சர் (பாதுகாப்பு) இஸ்மாயில் சப்ரி வெளியிட்ட ஓர் அறிக்கையில் இது கூறப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையின்படி, சினிமா துறையும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது, இருப்பினும், இது அனைத்து எம்.கே.என். வழிகாட்டுதல்களுக்கும் எஸ்ஓபிகளுக்கும் கட்டாயம் இணங்க வேண்டும்.