புதிய மத்தியத் துணை அமைச்சர் நியமிக்கப்படுவார்

ஒரு புதிய துணை அமைச்சர் நாளை பதவியேற்க உள்ளார்.

பதவியேற்பு விழா, நாளை காலை 10.30 மணிக்கு, இஸ்தானா நெகாராவில் மாட்சிமை தங்கிய மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாயத்துதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா முன் நடைபெறும் என மலேசியாகினி-க்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்தச் செய்தி வெளியிடும் வரையில், அந்நியமனம் குறித்த கூடுதல் விவரங்கள் எதுவும் பெறப்படவில்லை.

அந்நியமனம், ஏற்கனவே இருக்கும் துணை அமைச்சரை மாற்றுவதா அல்லது ஏற்கனவே உள்ள காலியிடத்தை நிரப்புவதா அல்லது புதிய அமைச்சரவைப் பதவி உருவாக்கப்படுகிறதா என்பதை அறிய முடியவில்லை.

தற்போதைக்கு, கடந்த ஆண்டு செப்டம்பரில், சுற்றுலா, கலை மற்றும் கலாச்சாரத் துணை அமைச்சர், ஜெஃப்ரி கிட்டிங்கன் பதவி விலகியதைத் தொடர்ந்து, அந்த இடம் இன்னமும் காலியாக உள்ளது.

ஜெஃப்ரி கிட்டிங்கன், சபா துணை முதல்வராக நியமிக்கப்பட்டதனால், துணையமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார்.

பிரதமர் முஹைதீன் யாசினின் அமைச்சரவை, இப்போது 32 அமைச்சர்கள் மற்றும் 38 துணை அமைச்சர்களைக் கொண்டுள்ளது. இது மலேசிய வரலாற்றிலேயே மிகப் பெரிய அமைச்சரவையாகும்.