சிலாங்கூரில் அனைத்து பள்ளிகளும் நாளை முதல் மூடப்படும்

சிலாங்கூரில் உள்ள அனைத்து பள்ளிகளும், அட்டவணையிடப்பட்டதற்கு முன்னதாக நாளை தொடங்கி மூடப்படும்.

சிலாங்கூர் கல்வித் துறை இன்று வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின்படி, ஹரி ராயா விடுமுறை வரையில் பள்ளிகள் மூடப்பட்டிருக்கும்.

“2021 மே 6 முதல் மே 12 வரை பள்ளிகளை மூட வேண்டுமென, இன்று நடந்த சிலாங்கூர் சிறப்பு பாதுகாப்புக் குழு (ஜே.கே.கே.என்.எஸ்) கூட்ட முடிவின்  பரிந்துரையைக் கல்வி அமைச்சு கவனத்தில் கொண்டுள்ளது.

“சிலாங்கூர் மாநிலத்தில் கோவிட் -19 நேர்வுகள் அதிகரித்ததைத் தொடர்ந்து, சமூகத்தில் நடமாட்டத்தைக் குறைப்பதற்கான ஒரு முயற்சியாக ஜே.கே.கே.என்.எஸ். இந்தப் பரிந்துரை செய்துள்ளது.

.நேருக்கு நேர் பள்ளி அமர்வுக்கு இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ளன என்பதை கணக்கில் எடுத்துக்கொண்டு, சிலாங்கூர் மாநிலத்தில் கல்வியமைச்சின் கீழ் உள்ள அனைத்து பள்ளிகளும் மே 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் மூடப்படும் என்று கல்வியமைச்சு முடிவு செய்துள்ளது.