‘எஸ்.ஓ.பி.யை மீறும் யாருக்கும் விலக்கு இல்லை, என் மகனாக இருந்தாலும்’ – அமைச்சர்

நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் (பி.கே.பி) கீழ், விதிகளை மீறியது நிரூபிக்கப்பட்டால், தனது சொந்த மகன் உட்பட யாருக்கும் விலக்கு அளிக்க முடியாது என்று பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் இன்று உறுதி அளித்தார்.

பிரபலங்களை ஜூரிகளாகக் கொண்ட, ஒரு பாடும் திறன் போட்டியில், கடாஃபி இஸ்மாயில் சப்ரி அல்லது டாஃபி என்று அழைக்கப்படும் அவரது மகன் கலந்துகொண்ட நிலையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.

ஆஸ்ட்ரோ நிலையத்தால் ஒளிபரப்பப்பட்ட இந்த நிகழ்ச்சி, தேசியப் பாதுகாப்பு மன்றம் (எம்.கே.என்.) நிர்ணயித்த செந்தர இயங்குதல் நடைமுறைகளை (எஸ்ஓபி) மீறியதாக பல தரப்பினரிடமிருந்து விமர்சனங்கள் எழுந்தது.

எம்.கே.என். உறுப்பினர்களில் இஸ்மாயில் சப்ரி ஒருவர்.

“எம்.கே.என். விசாரித்து வருகிறது (விஷயம்). யாரும் சட்டத்திலிருந்து விடுபட முடியாது.

“எஸ்.ஓ.பி.-ஐ மீறும் எவர் மீதும் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும், அது என் மகனாக இருந்தாலும்,” என்று மலேசியாகினியிடம் இன்று காலை குறுஞ்செய்தி மூலம் அவர் கூறினார்.

விவரக்குறிப்புகளை உருவாக்குங்கள்

‘ஆல் டுகெதர் நவ் மலேசியா’ (All Together Now Malaysia ) என்று அழைக்கப்படும் அந்தத் திறன் காட்டும் போட்டி நிகழ்ச்சி, ஆஸ்ட்ரோவின் சமீபத்திய நிகழ்ச்சியாகும். ஒரே இடத்தில், 50 ஜூரிகளைக் கொண்டிருந்த அந்த நிகழ்ச்சி பின்னர் பலரின் விமர்சனத்துக்குள்ளானது, ஜூரிகள் முகக்கவரிகளை அணியவில்லை என்பதால்.

சில தரப்பினர், தொழுகைகளுக்கு – மிகச் சிறிய எண்ணிக்கைக்கு மட்டுமே அனுமதி – எம்.கே.என். விதித்துள்ள எஸ்ஓபிக்கள் குறித்தும் கேள்வி எழுப்பினர்.

எஸ்ஓபி-ஐ மீறியதாகச் சந்தேகிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஷெர்ரி அல் ஹடாட் நடத்திய அந்நிகழ்ச்சியை ஆஸ்ட்ரோ நிறுத்தியது.

இதற்கிடையில், ஆஸ்ட்ரோ மலாய் பொழுதுபோக்கு உள்ளடக்க மேம்பாட்டு வியூகத் துணைத் தலைவர் ராகீம் அகமது, விசாரணை முடிந்ததும் அந்நிகழ்ச்சியின் நிலைமை அறியப்படும் என்றார்.

ஆல் டுகெதர் நவ் மலேசியாவின் பதிவு, கடந்த மார்ச் மாதம், புத்ராஜெயாவில், பி.கே.பி. 3.0 செயல்படுத்தப்படுவதற்கு முன்பு செய்யப்பட்டது.

“பதிவு தொடங்குவதற்கு முன்பு, அதில் பங்கேற்ற அனைவரிடமும் ஸ்மியர் சோதனைகள் நடத்தப்பட்டது.

“எதிர்மறை நிலை கொண்டவர்கள் மட்டுமே, நிகழ்ச்சி பதிவிற்கு அனுமதிக்கப்பட்டனர்,” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

50 பிரபல நீதிபதிகளை அமர்த்தும், அடுக்குகள் கொண்ட அரங்கு, சமூக இடைவெளியின் விவரக்குறிப்புகளின்படி கட்டப்பட்டது, இது ஒரு நடுவருக்கும் மற்றொரு நடுவருக்கும் இடையே 1.6 மீட்டர் இடைவெளியில் இருந்தது என்று ராகிம் தெரிவித்தார்.

மேலும் அவை, வெளிப்படையான தடையரண்களால் பிரிக்கப்பட்டிருந்தன.

இந்த நிகழ்ச்சியின் பதிவு செயல்முறை, பாதுகாப்பு நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டது என்று அவர் மேலும் சொன்னார்.

ஆல் டுகெதர் நவ் மலேசியாவின் முதல் பகுதி, கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பப்பட்டது, பிரபலங்கள் முகக்கவரி அணியாததால் எஸ்ஓபி மீறல்கள் இந்த நிகழ்ச்சியில் நடந்திள்ளதாக நெட்டிசன்கள் கூறினர்.

முன்னதாக, எஸ்ஓபிகளை மீறியதாகக் கூறி, தனியார் ஒளிபரப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் குறித்து விசாரணை நடத்த, எம்.கே.என். தலைமை இயக்குநர் மொஹமட் ராபின் பசீர் உத்தரவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

எஸ்ஓபி மீறப்பட்டது நிரூபிக்கப்பட்டால், தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சு தகுந்த நடவடிக்கை எடுக்கும் என்றும் மொஹமட் ராபின் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது.