கடன் கொடுத்தவர் கடனாளியால் கொலை செய்யப்பட்டார்

மட்டக்களப்பு வாழைச்சேனையில் பெண் ஒருவரை கழுத்தை நெரித்து கொலை செய்து மூட்டையில் அடைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

நேற்று இரவு வாழைச்சேனையில் பெண்ணை கொலை செய்த நபர் ஒருவர் அவரை மூட்டையாக உரைப்பையில் வைத்து கட்டி அதனை எடுத்துச் சென்று கடை ஒன்றின் முன்னால் வைத்துவிட்டு சென்றுள்ளார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் இது தொடர்பில் 28 வயதுடைய இளைஞர் ஒருவரை கைது கைதுசெய்துள்ளதாகவும் வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் வாழைச்சேனை சித்தி லைலா சோர்ந்த 55 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இளைஞர் கடை ஒன்றை நடாத்திவருவதாகவும் வாழைச்சேனை பலநோக்கு கூட்டுறவு சங்க வீதியில் வசித்துவரும் குறித்த பெண்ணுக்கும் கைது செய்யப்பட்ட இளைஞனுக்கும் இடையே கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்துவந்த நிலையில் சம்பவதினமான நேற்று இரவு குறித்த இளைஞன் பெண்ணிடம் சென்று பணம் கேட்ட நிலையில் இடம்பெற்ற வாக்கு வாதத்தின் எதிரொலிகாக அவரின் கழுத்தை நெரித்து கொலை செய்து உரைப்பையில் மூட்டை கட்டயதாகவும் கூறப்ப்டுகின்றது.

அதன்பின்னர் அந்த சடலத்தை மூட்டையாக எடுத்துச் சென்று வாழைச்சேனை பொதுச் சந்தை பகுதியிலுள்ள நண்பன் ஒருவரின் கடைக்கு முன்னால்மூட்டையை வைத்த இளைஞர், இது இருக்கட்டும் வந்து எடுக்கின்றேன் என தெரிவித்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிசர் தெரிவித்தனர்.

இதனையடுத்து நண்பன் நீண்ட நேரமாகியும் மூட்டையை எடுக்க வரவில்லை என்ற நிலையில் மூட்டை அருகில் சென்ற போது ஏற்பட்ட சந்தேகத்தையடுத்து மூடையை திறந்து பார்த்துள்ளார்.

அதில் சடலம் ஒன்று இருப்பதை கண்ட நபர் உடனடியாக அது தொடர்பில் பொலிசாருக்கு அறிவித்துள்ளார். இந்நிலையில் பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணையை மேற்கொண்டதுடன், சடலத்தை மூட்டையாக கொண்டு சென்று வைத்துச் சென்ற 28 வயது இளைஞனை நள்ளிரவில் கைது செய்தனர்.

மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டுவரும் நிலையில் குறித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2 ஆம் இணைப்பு; மேலதிக விபரம்

சம்பவத்தில் கொல்லப்பட்ட சித்தி லைலா என்பவரின் உறவினரான 27 வயதான இளைஞன் ஒருவர் ஓட்டமாவடி பகுதியில் வளர்ப்பு மீன், புறா விற்பனை வர்த்தக நிலையமொன்றை நடத்தி வரும் நிலையில், சித்தி லைலாவிடம் பொருளாதார கஷ்டம் காரணமாக பணம் கடனாக கேட்டுள்ளார்.

இதனையடுத்து தன்னிடமிருந்த நகைகள் சிலவற்றை அந்தப் பெண் வங்கியில் ஈடு வைத்து, 2 இலட்சம் ரூபா இளைஞருக்கு கடனாக கொடுத்துள்ளார். கடன் வாங்கி நீண்டகாலமாகியதால், பணத்தை திருப்பி தருமாறு அந்தப் பெண் கோரியுள்ளார். பல முறை கடன் தொகையை கேட்டு, நகையை மீட்கும்படி வங்கியால் வழங்கப்படும் அறிவித்தலையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், அந்தப் பெண் சமுர்த்திக் கடனிற்கும் விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில் வேறொருவரை போல அந்த பெண்ணை தொடர்பு கொண்டு. சமுர்த்திக்கடனிற்கு தெரிவாகியுள்ளதாகவும், நேற்று பிரதேச செயலகத்திற்கு வருமாறும், சந்தேகநபரே தகவல் வழங்கியுள்ளார். அதனை நம்பி, அந்தப் பெண் நேற்று பகல் 12 மணியளவில் அவர் பிரதேச செயலகம் சென்றதாக தெரிய வருகிறது. எனினும் அங்கு அவரது பெயர் தெரிவாகவில்லையென்பது தெரிய வந்தது.

அங்கு சென்ற சந்தேகநபரான இளைஞர், மூதாட்டியை தனது முச்சக்கர வண்டியில் ஏற்றிக் கொண்டு வங்கிக்கு சென்றுள்ளார். ஈடுவைத்த நகைகளை மீளப்பெற்றுத்தருவதாக கூறியே அழைத்துச் சென்றார். வங்கிக்கு சென்ற பின், ஏதோ ஒரு காரணம் கூறி, அந்த பெண்ணை மீண்டும் முச்சக்கர வண்டியில் ஏற்றிக்கொண்டு, ஓட்டமாவடியிலுள்ள தனது வர்த்தக நிலையத்திற்கு சென்றார்.

இதேவேளை, தாயை நீண்டநேரமாக காணாததையடுத்து மகள் தேடத் தொடங்கிய போது, பிரதேச செயலகத்தில் இருந்து உறவினரான இளைஞனின் முச்சக்கர வண்டியில் சென்றது தெரிய வந்தது. அவரிடம், விசாரித்த போது, மதியமே அவரை இறக்கி விட்டதாகவும், பின்னர் நடந்தது தெரியாதென்றும் கூறியுள்ளார்.

உறவினரான அந்த இளைஞனின் முச்சக்கர வண்டியில் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திற்கு நேற்று இரவு 7.30 மணியளவில் சென்ற மகள், தனது தாயாரை காணவில்லையென முறையிட்டதுடன், உறவினரின் முச்சக்கர வண்டியில் சென்ற தகவலையும் வழங்கினார்.

இதற்கிடையில், வங்கியிருந்து சித்தி லைலாவை ஓட்டமாவடியிலுள்ள தனது வர்த்தக நிலையத்திற்கு அழைத்துச் சென்ற இளைஞன், தனது வர்த்தக நிலையத்திற்குள் வைத்து அவரை கொலை செய்ததாக கூறப்படுகின்றது.

அதன்பின்னரே சடலத்தை உரப்பையில் கட்டி, வேறு இரண்டு மீன் மாஸ் மூட்டைகளையும் ஏற்றி, வாழைச்சேனை சந்தையில் வளர்ப்பு மீன் விற்பனையில் ஈடுபடும் நண்பரின் கடைக்கு முன்பாக கொண்டு சென்று வைத்துள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூன்றாம் இணைப்பு

கொலை இடம்பெற்ற வியாபார நிலையம் மற்றும் சடலம் காணப்பட்ட இடம் என்பவற்றை வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிவான் எச்.எம்.முஹமட் பஸீல், பார்வையிட்டார்.

அதோடு பெண்ணின் சடலத்தை வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்குமாறு கட்டளை பிறப்பித்துள்ளார்.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட குற்ற தடவியல் பொலிஸார் மற்றும் வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன மேலும் தெரிவித்தார்.

(நன்றி Jvpnews)