கோவிட் தொற்றுநோயை கட்டுப்படுத்துவதற்காக, அரசாங்கம் உடனடியாக சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கோரியுள்ளார்.
அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர்,தொற்றுநோய் பரவலாகப் பரவி வருவதாகவும், தினமும் பலர் வைரஸால் பாதிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.புள்ளி விபரங்களிலும் பிரச்சினைகள் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
தடுப்பூசியை சுகாதார அமைச்சின் கீழ் இல்லாமல், இராணுவத்தைக் கொண்டு செலுத்தப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அவர் கூறியுள்ளார்.
12 அகவைக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் என்றும் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறையால் உயிர்கள் காப்பாற்றப்படுகின்ற போதிலும், அரசாங்கம் தற்போது அவர்களின் ஆலோசனையை கேட்க மறுக்கிறது.
நாட்டை முடக்குவதற்கான மருத்துவர்களின் கோரிக்கைகளை நிராகரிப்பதற்கான காரணங்களை அரசாங்கம் விளக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் கேட்டுள்ளார்.
கோவிட் விடயத்தில் உலக சுகாதார மைத்தின் கீழ் ஒரு தனி நிபுணர் குழு இருக்க வேண்டும். இலங்கையில் மட்டும் அத்தகைய குழு அமைக்கப்படவில்லை ஏனைய எல்லா நாடுகளிலும் இதுபோன்ற குழு செயற்படுகிறது.
எனவே அரசாங்கம் உடனடியாக மருத்துவ நிபுணர்களை ஒன்றிணைத்து இந்தக் குழுவை அமைக்க வேண்டும் என்று ரணில் விக்கிரமசிங்க கோரியுள்ளார்.
(நன்றி Tamilwin )
இந்தச் செய்திக்கும் இணைக்கப்பட்ட படத்துக்கும் சம்பந்தமில்லையே. செய்தியில் ஸ்ரீ லங்கா ராணுவத்தைப் பற்றிய சாரம் இருக்கிறது. படமோ, விடுதலைப் புலிகளைச் சித்தரிக்கிறது. இந்தப் படத்தைப் பார்த்தவுடன், ஏதோ தடுப்பூசி போடும் பொறுப்பு விடுதலைப் புலிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், அதற்கு அந்நாட்டு மக்களிடமிருந்து கண்டனம் வந்திருப்பதாகவும் ஒரு மாயை நிலைமையை உண்டாக்குகிறது. உங்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டால் கூகுளில் இரண்டு இராணுவத்தையும் அடையாளம் காட்டும் கருச்சொற்களைக் கொண்டு தேடிப் பாருங்கள். நன்றி.