22,242 புதிய நேர்வுகள், சபா மற்றும் பினாங்கில் நேர்வுகள் அதிகரிப்பு

கோவிட் – 19 | கடந்த 24 மணி நேர நேரத்தில், 22,242 புதியக் கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சபா (2,413) மற்றும் பினாங்கு (1,867) இரண்டும், இன்று அதிக நேர்வுகளைப் பதிவு செய்துள்ளன.

சபாவில் உள்ள மக்கள்தொகையில் 17 விழுக்காட்டினர் மட்டுமே கோவிட் -19 தொற்றுக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ள நிலையில், பினாங்கில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியினருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மேலும், 225 கோவிட்-19 இறப்புகள் இன்று பதிவாகியுள்ளன. இது நாட்டில் இத்தொற்றுக்குப் பலியானவர் எண்ணிக்கையை 13,302– ஆக உயர்த்தியுள்ளது.

இதற்கிடையில் இன்று, 19,680 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 1,060 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 540 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-

சிலாங்கூர் (6,858), சபா (2,413), பினாங்கு (1,867), கெடா (1,852), கோலாலம்பூர் (1,587), ஜொகூர் (1,477), சரவாக் (1,403), கிளந்தான் (1,351), பேராக் (1,036), பகாங் (675), மலாக்கா (579), நெகிரி செம்பிலான் (577), திரெங்கானு (487), பெர்லிஸ் (50), புத்ராஜெயா (25), லாபுவான் (5).

மேலும் இன்று, 49 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டுள்ளன, அவற்றுள் 30 பணியிடத் திரளைகள் ஆகும்.