இலங்கையில் சிறுவர்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து! பெற்றோர்களிடம் விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை

கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்த சிறுவர்கள் Silent hypoxia எனப்படும் நோயினால் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவின் பொறுப்பாளர் விசேட வைத்தியர் நலின் கித்துல்வத்த இதனை தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.

‘’கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டு குணமடைந்த சிறுவர்கள், தோற்றத்தில் சிறந்த முறையில் இருந்தாலும், சில சந்தர்ப்பங்களில் அவர்களின் ஒக்சிஜனின் அளவு குறைவதற்கான சாத்தியம் காணப்படுகின்றது.

அவ்வாறு ஒக்சிஜனின் அளவு குறைவடையுமாக இருந்தால், சிறுவர்களுக்கு சுவாசிக்க முடியாத நிலைமை, பேச முடியாத நிலைமை, நடக்க முடியாத நிலைமை ஏற்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எந்தவித அறிகுறிகளும் இல்லாது ஒக்சிஜனின் அளவு குறைவடைவதை Silent hypoxia என்பார்கள். இவ்வாறான நோயாளர்கள் தற்போது அடையாளம் காணப்படுகின்றனர்.

கோவிட் தொற்றுக்குள்ளாகி குணமடைந்த சிறந்த முறையில் விளையாடும் சிறுவர்களுக்கு விளையாடும் சந்தர்ப்பங்களில் மாத்திரம் ஒக்சிஜன் குறையும் நிலைமை ஏற்பட வாய்ப்புள்ளது.

இது பாரதூரமான ஒன்று. ஆகைனயினால் நாளொன்றிற்கு இரண்டு தடவைகள் சிறுவர்களின் இரத்தத்திலுள்ள ஒக்சிஜனின் அளவை கணிப்பிட்டுக் கொள்வது சிறந்தது என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதன்போது ஒக்சிஜனின் அளவு 96 அல்லது 94 வீதத்திற்கு குறைவாக காணப்படுமாக இருந்தால், குறித்த சிறுவர்களை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிப்பது அவசியம்’’  என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

(நன்றி Tamilwin)