இலங்கையில் வசதி வாய்ப்புள்ளவர்கள் மற்றும் வெளிநாட்டு சொத்துக்களை வைத்துள்ளவர்கள், வர்த்தகர்கள் தமது வருமானத்தில் அரைவாசியை கோவிட் – 19 நிதியத்திற்கு வழங்க முன்வர வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் மாதாந்த சம்பளத்தின் அரைவாசியை கோவிட் – 19 நிதியத்துக்கு வழங்குவது தொடர்பில் ஊடகவியலாளர்கள் அண்மையில் கேள்வியெழுப்பியிருந்தனர்.
இதற்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
பணமில்லாத மக்கள் பிரதிநிதிகளிடம் நாம் இதனை கோரிக்கை விடுப்பதில்லை. எனினும் வருமானம் ஈட்டுகின்றன சகல மக்கள் பிரதிநிதிகளும் இந்த சந்தர்ப்பத்தில் தமது சம்பளத்தில் அரைவாசியை வழங்குவதற்கு முன் வரவேண்டும்.
அதேபோன்று எமது நாட்டில் வசிக்கும் மற்றும் வெளிநாட்டு சொத்துக்களை வைத்துள்ள ஏனையவர்களும் தாம் உழைக்கும் வருமானத்தின் ஒரு பகுதியை இந்த சந்தர்ப்பத்தில் அர்பணிப்பு செய்வது மிகவும் முக்கியமானது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு மாத்திரமல்லாமல் அனைத்து வர்த்தகர்களுக்கும் இது பொருந்துமென சுட்டிக்காட்டியுள்ளார்.
(நன்றி TAMILWIN)