வேகா இன்னோவேஷன்ஸ், ஒரு முறை சார்ஜ் செய்தால் 120 கிலோ மீற்றர் தூரம் பயணிக்கக்கூடிய மின்சார முச்சக்கர வண்டிகளை தயாரிக்கத் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.
வேகா இன்னோவேஷன்ஸின் இயக்குநர் கலாநிதி பெஷன் குலாபால இதனை தெரிவித்துள்ளார். இணைய ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை கூறியுள்ளார்.
இதன் மூலம் ஒரு வருடத்திற்கு பில்லியன் கணக்கான டொலர்களை சம்பாதிக்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
மின்சார முச்சக்கரவண்டி அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் இலங்கையில் விற்பனைக்கு வரும் என்றும், அதை வெளிநாட்டு சந்தைகளுக்கு விற்று இலங்கைக்கு பில்லியன் டொலர் அந்நிய செலாவணியை ஈட்ட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது இந்திய முச்சக்கர வண்டிகளை விட மலிவானது எனவும், அத்துடன், இந்திய முச்சக்கர வண்டிகளை விட திறமையானதாகவும், சிறப்பானதாகவும் வடிவமைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனை இலங்கை தயாரிப்பு என்று கூறலாம். இந்த மின்சார முச்சக்கர வண்டியின் அனைத்து வடிவமைப்புகளும் இலங்கை பொறியாளர்களால் வடிவமைக்கப்பட்டவை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
(நன்றி Tamilwin)