இலங்கையில் தயாரிக்கப்படும் கார்ட்போர்ட் சவப்பெட்டி சர்வதேச மட்டத்தில் அதிகம் பேசப்படுவதுடன், அதனை கொள்வனவு செய்யவும் சில நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன.
தெஹிவளை – கஸ்கிஸ்ஸ மாநகர சபையின் உறுப்பினர் பிரியந்த சஹபந்துவின் கார்ட்போர்ட் சவப்பெட்டி தயாரிக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதற்கமைய 1000 கார்ட்போட் சவப்பெட்டிகளை கொள்வனவு செய்வதற்கு உலகில் முதல் வெளிநாடாக வியட்நாம் முன்வந்துள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
அந்த சவப்பெட்டிகளை எதிர்வரும் திங்கட்கிழமை கப்பல் மூலம் ஏற்றுமதி செய்யப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
கொவிட் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு 5000 ரூபாய் என்ற சிறிய தொகையில் சவப்பெட்டி வழங்கும் நோக்கில் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டதாக சஹபந்து தெரிவித்துள்ளார்.
பொதுவாக மரப்பலகையிலான ஒரு சவப்பெட்டி செய்வதற்கு 2 மரங்களை வெட்ட வேண்டும் என்ற காரணமாக இந்த பெட்டி சுற்றுசூழலுக்கு நெருக்கமான முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த சவப்பெட்டி அவசியம் ஏற்பட்டால் உடனடியாக கொள்வனவு செய்துக் கொள்ள முடியும் என மாநகர சபையின் உறுப்பினர் பிரியந்த சஹபந்து தெரிவித்துள்ளார்.
(நன்றி TAMILWIN)