இலங்கையுடனான இராணுவ உறவுகளை வலுப்படுத்த இந்தியா எதிர்பார்ப்பு

அண்டை நாடு முதலில் கொள்கையின் ஒரு பகுதியாக இலங்கையுடனான தனது இராணுவ உறவுகளை வலுப்படுத்த, இந்தியா எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் இதனை தெரிவித்துள்ளது.

இலங்கை ஆயுதப்படைகளின் ஆளுமை மேம்பாடு உட்பட ஒட்டுமொத்த திறன் மேம்பாட்டிற்கு இந்தியா பங்களிக்கிறது.

பாதுகாப்பு சேவைகளில் இலங்கை ஆயுதப்படைகளின் அதிகாரிகளுக்கு, இந்தியாவுக்கான சர்வதேச ஒத்துழைப்பு பயணம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக உயர்ஸ்தானிகரகம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையின் 39 படை அதிகாரிகளுக்காக, இந்திய உயர்ஸ்தானிகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பயணம் தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகரகம் வெளியிட்ட குறிப்பிலேயே இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

(நன்றி TAMILWIN)