வீட்டில் இருக்கும் கோவிட் தொற்றுக்குள்ளான சிறுவர்கள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு

வீட்டில் கடுமையான அறிகுறிகள் இல்லாத கோவிட் தொற்று உள்ளான குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா இதனை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அத்தகைய குழந்தைகளுக்கு முடிந்தவரை திரவ உணவை வீட்டிலும் ஓய்விலும் கொடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்தகைய குழந்தைக்கு அதிக உடல் வெப்பநிலை இருந்தால், சரியான அளவு பரசிட்டமால் கொடுத்து மருத்துவமனையில் சேர்ப்பது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, தற்போது பரவி வரும் டெங்கு காய்ச்சலில் இருந்து குழந்தைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் வைத்தியர் தீபால் பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.

(நன்றி TAMIL WIN)