யாழில் அதிகரித்துள்ள கோவிட் மரணங்கள்! கார்ட்போர்ட் சவப்பெட்டிக்கான கோரிக்கை அதிகரிப்பு

யாழ்ப்பாணத்தில் உயிரிழக்கும் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் சவப்பெட்டிகளுக்கு அதிக சிக்கல்கள் ஏற்பட்டுள்ளமையினால் யாழ்ப்பாணத்திற்கு கார்போர்ட் சவப்பெட்டிகளை விற்பனை செய்யுமாறு சவப்பெட்டி விற்பனைபாளார்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் சவப்பெட்டி விற்பனை செய்யும் நபர்கள் இது தொடர்பில் யாழ் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் அங்கஜன் ராமநாதனிடம் கோரிக்கை விடுப்பதற்கு தீர்மானித்துள்ளனர்.

இந்த நாட்களில் யாழ்ப்பாணத்தில் ஒவ்வொரு விலைகளில் சவப்பெட்டிகள் விற்பனை செய்யப்படுவதாக அதன் விற்பனையார்கள் தெரிவித்துள்ளனர்.

கோவிட் தொற்றினால் உயிரிழக்கும் குடும்பத்தை சேர்ந்தவர்கள் கடும் நெருக்கடி நிலைக்குள்ளாகியுள்ளனர். கோவிட் தொற்றினால் உயிரிழக்கும் அனைவரும் கார்ட்போர்ட் சவப்பெட்டிகளை பயன்படுத்தினால் இந்த நிலைமை ஏற்படாதென விற்பனையார்ளகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேல் மாகாணத்தில் தயாரிக்கும் கார்ட்போர்ட் சவப்பெட்டிகளை யாழ்ப்பாண விற்பனையாளர்கள் பெற்றுக் கொள்ளும் முறை ஒன்றை ஏற்படுத்தி தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

(நன்றி Tamilwin)