பிஎன் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும், ஒரு குறிப்பிட்ட கட்சியால் கட்டுப்படுத்தக் கூடாது – மக்கள் சக்தி

மக்கள் சக்தி கட்சியின் தலைவர் ஆர்எஸ் தனேந்திரன், பாரிசான் நேஷனல் (பிஎன்) கூட்டணி அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும், ஒரே அரசியல் சிந்தனையுடன் இருக்க வேண்டும் என்று கூறினார்.

“மக்கள் சக்தி கட்சியைப் பிஎன்-இன் ஓர் அங்கமாகப் பதிவு செய்யும் முயற்சியில், பிஎன் கட்சிகளுடன் இணைந்து செயல்படுகிறது.

இன்று கோலாலம்பூர், மெனரா டத்தோ ஓன்’னில், கட்சியின் வருடாந்திரப் பொது மாநாட்டிற்குத் தலைமை தாங்கியப் பிறகு, “தற்போது, ​​எல்லாம் சீராக இயங்குகிறது, எந்தப் பிரச்சனையும் இல்லை,” என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.

பிஎன்-இன் சமீபத்திய நிலை குறித்து கருத்து கேட்டபோது அவர் இவ்வாறு கூறினார்.

முன்னதாக, மக்கள் சக்தி ‘மெஸ்ரா பிஎன்’ அல்லது ‘பிஎன் நட்பு’ என 13 ஆண்டுகளாக அறியப்பட்டது.

“பிஎன் துணைத் தலைவர் முகமது ஹசான் முன்பு கூறியது போல், பிஎன் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.

“ஒரே அரசியல் சித்தாந்தம் கொண்ட அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இது திறந்திருக்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் அவரவர் பாத்திரங்களை வகிக்கும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.

“சில கட்சிகள் மட்டும் கட்டுப்படுத்துவதாக இருக்க முடியாது. பிஎன் -இல் இன்னும் போதுமான இடம் உள்ளது. அது அனைவருக்கும் போதுமானது,” என்று அவர் கூறினார்.

தற்போது, ​​பிஎன் அம்னோ, மசீச, ம.இ.கா. மற்றும் பிபிஆர்எஸ் ஆகிய நான்கு கட்சிகளைக் கொண்டுள்ளது.

பிஎன் ஒருமித்த கருத்தின் கீழ், அனைத்து உறுப்பு கட்சிகளும் புதிய உறுப்பினர்களை உள்நுழைய ஒப்புக்கொள்ள வேண்டும்.