சிவப்பு எச்சரிக்கை பட்டியலில் இருந்து விடுவிக்கபட்ட இலங்கை!

கொரோனா தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் காரணமாக பயணத்தடை விதித்திருந்த நாடுகளின் சிவப்பு எச்சரிக்கை பட்டியலில் இருந்து இலங்கையை நீக்கிக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக  சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க (Prasanna Ranatunga) தெரிவித்துள்ளார்.

எனினும் தற்போது பல நாடுகளுடன் இராஜதந்திர மட்டத்திலான கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்கா, அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து, ஜெர்மனி, கனடா, சீனா, ஸ்பெயின், சிங்கப்பூர், மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகள் இலங்கைக்கு பயணத்தடை விதித்துள்ளன.

(நன்றி JVP NEWS)