13,104 புதிய நேர்வுகள், 66 நாட்களில் குறைந்த எண்ணிக்கை பதிவு

சுகாதார அமைச்சு இன்று 13,104 புதிய கோவிட் -19 நேர்வுகளைப் பதிவு செய்து, மொத்த நேர்வுகளின் எண்ணிக்கையை 2,198,235 -ஆக பதிவு செய்துள்ளது.

கிள்ளான் பள்ளத்தாக்கிலும் கோலாலம்பூரிலும் 270 நேர்வுகள், சிலாங்கூரில் 1,558 நேர்வுகள் என குறைந்து வரும் போக்கைக் கண்டன.

கடந்த 66 நாட்களில், இன்று மிகக் குறைவான தொற்று பதிவானது.

மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-

சரவாக் (2,943), சிலாங்கூர் (1,558), ஜொகூர் (1,455), கிளந்தான் (1,206), சபா (1,078), பேராக் (994), பினாங்கு (955), கெடா (721), திரெங்கானு (685), பகாங் (604), மலாக்கா (362), கோலாலம்பூர் (270), நெகிரி செம்பிலான் (165), பெர்லிஸ் (80), புத்ராஜெயா (24), லாபுவான் (4).