இலங்கை வரலாற்றில் முதல்முறையாக ஒரு அரசாங்கம் திவாலாகிவிட்டதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன (Rajitha Senaratne) தெரிவித்துள்ளார்.
இன்று மக்களுக்கு உணவு இல்லை, குழந்தைகளுக்கு பால் இல்லை என்றும் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் நாடு சீரழிந்துள்ளது என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த உண்மையை ஏற்றுக்கொள்ளாதவர்கள் யாராவது இருந்தால், அவர்களின் பகுதிகளில் மனநல மருத்துவமனைகள் அமைக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன இவ்வாறு தெரிவித்துள்ளார்.
(நன்றி Tamil Win)