நாட்டில் அத்தியாவசியமற்ற பொருட்கள் இறக்குமதிக்கான வரியை குறைப்பதற்கான நடவடிக்கை எடுப்பதுக் குறித்து மத்திய வங்கி ஆளுநரிடம் அறிவுறுத்தியுள்ளார் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ.
அத்தியாவசியமற்ற பொருட்கள் மற்றும் கருவிகளுக்கு தற்போது வரை நடைமுறையில் உள்ள இறக்குமதி கட்டுப்பாடுகளை குறைக்கும் வகையில் நிவாரணம் வழங்க வேண்டும் என ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலை பிரதமர் மஹிந்த வலியுறுத்தியுள்ளார்.
இதன் காரணமாக வர்த்தகர்களும்,பொதுமக்களும் எதிர்கொண்ட சிரமங்களை கருத்தில் கொண்டு இந்த கோரிக்கையை பிரதமர் முன்வைத்துள்ளார். அதன் பொருட்டு மத்திய வாங்கி ஆளுநரும் நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
(நன்றி JVP NEWS)