கொழும்பு துறைமுகம் வருகின்றது உலகின் மிகப் பெரிய சரக்கு கப்பல்!

உலகின் மிகப் பெரிய மற்றும் நீளமான சரக்கு கப்பல் என கருதப்படும் எவர் எஸ் ( Ever Ace) கப்பல் இன்றைய தினம் கொழும்பு துறைமுகத்திற்கு வரவுள்ளது.

400 மீற்றர் நீளமும், 61.5 மீற்றர் அகலமும் கொண்ட இந்த சரக்கு கப்பலில் சுமார் 24 ஆயிரம் கொள்கலன் பெட்டிகளை ஏற்றிச் செல்ல முடியும்.

கொழும்பு துறைமுகத்திற்கு இறக்குவதற்காக ஒரு தொகை கொள்கலன் பெட்டிகளுடன் இந்த கப்பல் இன்று இலங்கை வரவுள்ளதாக இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர் கடற்படை கப்டன் நிஹால் கெப்பட்டிபொல தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுகம் உட்பட உலகின் 24 துறைமுகங்களுக்கு மாத்திரமே இந்த கப்பலால் பயணிக்க முடியும் என்பது விசேட அம்சமாகும். இது இலங்கையின் கடல்சார் வர்த்தக வரலாற்றில் முக்கிய திருப்பு முனையாக அமையு என துறைமுக அதிகாரசபை தெரிவித்துள்ளது.

(நன்றி TAMIL WIN)