இலங்கையில் கலகங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது! – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

விவசாயிகளுக்கு தரமான பசளையை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்காது போனால், நாட்டில் பஞ்சம் ஏற்படுவது மாத்திரமல்ல நாட்டுக்குள் கலகங்கள் ஏற்படும் நிலைமை உருவாக வாய்ப்புள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க(Champikka Ranawakka) எச்சரித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

சேதனப் பசளை மூலமான பயிர் செய்கை தோல்வியடைந்துள்ளது என்பதை ஜனாதிபதியும் கமத்தொழில் அமைச்சரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அத்துடன் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்சவும்(Gotabhaya Rajapaksha), கமத்தொழில் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேவும்(Mahindananda Aluthgamage) உழவர்களை கும்பிட்டு, மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சேதனப் பசளையை பயன்படுத்தி ஒரு வீதமான பயிர் செய்கையை செய்து காட்டுமாறு ஜனாதிபதி மற்றும் அமைச்சர் மகிந்தானந்த ஆகியோருக்கு சவால் விடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இவ்வாறு செயற்படுவதன் மூலம் நாடு பஞ்சத்தை நோக்கி செல்லும் என்பது மாத்திரமல்ல, மிகவும் பாரதூரமான கலகங்கள் ஏற்படும் சூழ்நிலை உருவாகி, சமூகத்திற்குள் கிளர்ச்சிகள் ஏற்படக் கூடிய வாய்ப்புகள் இருப்பதாகவும் ரணவக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

(நன்றி Tamil win)