இரசாயன உரத்திற்கு தடை விதிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் பிழையான ஆலோசனைகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதாக விவசாய அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதித் கே ஜயசிங்க (Udith K. Jayasinghe) தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி, துறைசார் அமைச்சர் அல்லது அரசாங்கம் பொறுப்பு சொல்ல வேண்டியதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மாறாக உயர் அரசியல் தலைவர்களுக்கு ஆலோசனை வழங்கியவர்களே பிழையான வழிகாட்டல்களை மேற்கொண்டுள்ளனர்.
ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடனத்தினை தயாரிப்பதற்கு நாமும் பங்களிப்பு செய்துள்ளோம்.
விசமற்ற தரமான உர வகைகளை அறிமுகம் செய்ய வேண்டும் என்பதே ஜனாதிபதியின் இலக்காக காணப்பட்டது.
இரசாயன உர பயன்பாட்டை தடை செய்யும் வர்த்தமானி அறிவித்தலுக்கு பதிலீடாக சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத உர வகைகளை இறக்குமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டிருக்க வேண்டும்.
தற்போதைய நிலைமை குறித்து ஜனாதிபதி, அமைச்சர்கள் மற்றும் ஆய்வாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
தற்போதைய பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டுமென அங்கு பேசப்பட்டது. தேவையற்ற விசம் கலந்த உர வகைக்களை விடவும் தரம் கூடிய சேதன பசளைகளை பயன்படுத்த வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
(நன்றி TAMIL WIN)