இலங்கையில் இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது கவலையளிக்கிறது – வெளியுறவுத்துறை

கடந்த 18-20 தேதிகளில் தமிழ்நாட்டில் இருந்து சென்ற இந்திய மீனவர்கள் இலங்கையில் கைது செய்யப்பட்டிருப்பது கவலை அளிக்கிறது என்று இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்ஷி தெரிவித்துள்ளார்.

இந்திய மீனவர்கள் 68 பேர் தற்போது இலங்கை சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் 10 படகுகளும் இலங்கை வசம் உள்ளன. தமிழ்நாடு அரசு மற்றும் அரசியல் கட்சிகளும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளன.

இதையடுத்து, விரைந்து விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள மீனவரை இந்திய தூதரக அதிகாரி நேரில் சந்தித்து மருத்துவ உதவிகள் செய்துள்ளார். அவர்களுக்கு தேவையான அடிப்படை மற்றும் சட்ட உதவிகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.