கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில், உணவு, எரிபொருள், எரிவாயு மற்றும் பல அத்தியாவசியப் பொருட்கள் பற்றாக்குறையால் பொதுமக்கள் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் நெருக்கடி காரணமாக கொழும்பில் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், அதிகரித்து வரும் போக்குவரத்து செலவுகள் காரணமாக விலையில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் துஷார இந்துனில் தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும் அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாட்டுக்கான தீர்வுகள் குறித்து அவர் வர்த்தக அமைச்சரிடம் கேள்வியையும் எழுப்பியுள்ளார்.
கடந்த இரண்டு வருடங்களில் அரசாங்கம் வெளிப்படுத்திய மோசமான முடிவெடுக்கும் திறமைக்கு அரசாங்கத்தையும் அதன் தலைவர்களையும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதேவேளை, ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையில் இடம்பெற்று வரும் மோதலில் இருந்து இலங்கை பாடம் கற்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
IBC Tamil